உங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா? உங்களுக்கு வெளிநாட்டில் சொத்து சேர்க்கும் யோகம் உள்ளதாம்

உங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா? உங்களுக்கு வெளிநாட்டில் சொத்து சேர்க்கும் யோகம் உள்ளதாம்

ஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும் ஒன்று. பரிவர்த்தனை யோகம் என்பது, இரண்டு கிரகங்கள் ராசி மாறி இடம் பெற்றிருக்கும்.

உதாரணமாக சூரியனின் வீடான சிம்மத்தில் சந்திரனும், சந்திரனின் வீடான கடகத்தில் சூரியனும் இருந்தால், கிருஷ்ணதுளசி சூரியனும் சந்திரனும் பரிவர்த்தனை பெற்று பரிவர்த்தனை யோகத்தைக் கொடுக்கும்.

கிரகங்கள் பரிவர்த்தனை பெற்று இருந்தால் தரக்கூடிய பலன்களைப் பார்ப்பதற்கு முன்பு, கிரகங்களுக்கு உரிய வீடு எது என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

சூரியனின் வீடு – சிம்மம்,
சந்திரனின் வீடு – கடகம்,
செவ்வாயின் வீடுகள் – மேஷம், விருச்சிகம்,
புதனின் வீடுகள் – மிதுனம், கன்னி,
குருவின் வீடுகள் – தனுசு, மீனம்,
சுக்கிரனின் வீடுகள் – ரிஷபம், துலாம்,
சனியின் வீடுகள் – மகரம், கும்பம்.
ஆனால் ராகு, கேது இருவருக்கும் சொந்த வீடுகள் இல்லை என்பதால், அந்த இரண்டு கிரகங்களாலும் பரிவர்த்தனை யோகம் ஏற்படாது.

அதுவே சூரியனும் மற்ற கிரகங்களும் பரிவர்த்தனை பெற்றிருக்கும் ஜாதர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்…

வெளிநாட்டில் சொத்து சேர்க்கும் யோகம் உள்ள ஜாதக அமைப்பு?

சூரியனின் வீடான சிம்மத்தில் சந்திரன் இருந்து, சந்திரனின் வீடான கடகத்தில் சூரியன் இருந்து பரிவர்த்தனை பெற்றிருந்தால், அந்த ஜாதகம் யோக ஜாதகம் ஆகும்.

சந்திரனும் சூரியனும் பரிவர்த்தனை பெற்றிருப்பவர்கள், கடல் கடந்து வியாபாரம் செய்து பெரும் செல்வம் சேர்ப்பார்கள். வெளிநாடுகளில் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

பூர்விகச் சொத்து யாருக்கு கிடைக்கும்?

சூரியனின் வீடான சிம்மத்தில் செவ்வாய் இருந்து, செவ்வாயின் வீடுகளான மேஷம் அல்லது விருச்சிகத்தில் சூரியன் இருந்து பரிவர்த்தனை பெற்றிருந்தால், பெண்களாக இருந்தால் ஆண்களின் கம்பீரமும் மிடுக்கும் பெற்றிருப்பார்கள்.

ஆண்களாக இருந்தால் சந்திரன் பெண்களின் மென்மையும் நளினமும் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு பூர்விகச் சொத்து கிடைக்கும் யோகம் உண்டு.

வியாபாரம் சிறக்கும் ஜாதக அமைப்பு?

சூரியனின் வீடான சிம்மத்தில் புதன் இருந்து, புதனின் வீடுகளான மிதுனம் அல்லது கன்னியில் சூரியன் இருந்தால், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கும். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்வார்கள்.

மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களை லாபகரமாக நடத்துவார்கள்.

பணக்கஷ்டம் வராத ஜாதக அமைப்பு?

சூரியனின் வீடான சிம்மத்தில் குரு இருந்து, குருவின் வீடுகளான தனுசு அல்லது மீனத்தில் சூரியன் இருந்தால், சொந்தமாக நிதி நிறுவனங்களை நடத்துவார்கள்.

வங்கிகளில் உயர் பொறுப்புகளை வகிப்பவராக இருப்பார்கள். இவர்களுக்கு பணக் கஷ்டம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை.

வசதி வாய்ப்புகள் பெருகும் யோகம் யாருக்கு?

சூரியனின் வீடான சிம்மத்தில் சுக்கிரன் இருந்து, சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் அல்லது துலாமில் சூரியன் இருந்தால், ஜாதகருக்கு பெண் குழந்தைகளே பிறக்கும்.

பெண்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத்துணையால் இவர்களின் வசதி வாய்ப்புகள் பெருகும். ஆனால், சூரியன் துலாமில் நீச்சம் பெறுவதால், சில தடைகளும் ஏற்படும்.