உங்கள் ராசி என்ன? உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்!!

உங்கள் ராசி என்ன? உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்!!

ஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம் தரும் திசை, எண், கிழமை மற்றும் நிறம் போன்றவையும் வித்தியாசமாக தான் இருக்கும்.

அந்த வகையில் எந்த ராசியினருக்கு எவையெல்லாம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று பார்க்கலாம் வாங்க…

மேஷம்

மேஷம் ராசியினர் சமயோகித பேச்சுக்களால் காரிய சித்தி பெறுவார்கள். அந்நியர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை – கிழக்கு

அதிர்ஷ்ட எண் – 1

அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு

ரிஷபம்

ரிஷப ராசியினரின் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவார்கள். மனையின் மூலம் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு

அதிர்ஷ்ட எண் – 5

அதிர்ஷ்ட நிறம் – இளம்பச்சை

மிதுனம்

மிதுன ராசியினர் குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் தோன்றும். அதனால் இவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை – மேற்கு

அதிர்ஷ்ட எண் – 6

அதிர்ஷ்ட நிறம் – சந்தன வெள்ளை

கடகம்

கடகம் ராசியினர்களுக்கு மனதில் புதிய வகையான எண்ணங்கள் தோன்றும். மறுமணத்திற்கு வரன் தேடுவதற்கான சரியான காலம் தான் இது. மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட எண் – 9

அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு நிறம்

சிம்மம்

சிம்மம் ராசியினர் நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வார்கள். வாகனம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை – கிழக்கு

அதிர்ஷ்ட எண் – 3

அதிர்ஷ்ட நிறம் – இளம் மஞ்சள்

கன்னி

கன்னி ராசியினர் மூத்த சகோதரர்களிடம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு

அதிர்ஷ்ட எண் – 8

அதிர்ஷ்ட நிறம் – இளநீலம்

துலாம்

துலாம் ராசியினர்கள் பயணங்களில் அதிக கவனம் தேவை. சந்திராஷ்டமம் தொடர்வதால் கூட்டாளிகளிடம் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. இவர்களுக்கு எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை – மேற்கு

அதிர்ஷ்ட எண் – 4

அதிர்ஷ்ட நிறம் – சாம்பல் நிறம்

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் தந்தையின் உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. புதிய முயற்சிகளை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட எண் – 1

அதிர்ஷ்ட நிறம் – அடர் சிவப்பு

தனுசு

தனுசு ராசியினர் நண்பர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்க வேண்டும். இவர்கள் தொழிலின் மூலம் பிரபலம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை – கிழக்கு

அதிர்ஷ்ட எண் – 9

அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு நிறம்

மகரம்

மகர ராசியினர் நெருங்கிய உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகும். அயல்நாட்டு பயணங்களில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு

அதிர்ஷ்ட எண் – 6

அதிர்ஷ்ட நிறம் – சந்தன வெள்ளை

கும்பம்

கும்பம் ராசியினர் தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் வந்தடையும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். நெருங்கிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றும்.

அதிர்ஷ்ட திசை – மேற்கு

அதிர்ஷ்ட எண் – 2

அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்

மீனம்

மீனம் ராசியினர் எதிர்கால பலன் கருதி, புதிய திட்டங்களை தீட்டுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமைப்படக் கூடிய செய்திகள் வந்தடையும். பூர்விக சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட எண் – 4

அதிர்ஷ்ட நிறம் – ஊதாநிறம்