வாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு எவ்வாறு செய்வது

வாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு எவ்வாறு செய்வது

கைபேசி அல்லதுதிறன்பேசிகள் பேசுவதற்குமட்டுமல்லாது மின்னஞ்சல்களை கையாளுவது இணைய உலாவருவது கணினிவிளையாட்டுகளை பயன்படுத்திகொள்வது தயார்நிலை செய்தியாளர்களை கையாளுவது என தகவல்தொடர்பிற்கான பல்வேறு பயன்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே வருகின்றன பொதுமக்கள் குழுவிவாதங்களிலும் தயார்நிலைசெய்தியாளர்களை கையாளுவதிலும் அதிகஈடுபாட்டுடன் உள்ளனர் அவ்வாறான தயார்நிலைசெய்தியாளர் தளமான வாட்ஸ்அப்பினை நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றோம் இது ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் விண்டோ ஆகிய பிரபலமான இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கதாகவிளங்குகின்றது குழுவிவாதங்களில் பெரும்பங்காற்றுவதுதான்வாட்ஸ்அப்பின் சிறப்பம்சமாகும் இதன் வாயிலாக நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுடன் செய்திகளை பரிமாறிக் கொள்ளவும் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுடன் பராமரிப்பு விவரங்கள் தொடர்பான செய்திகளை பரிமாறி கொள்ளவும் பேருதவியாகஇருக்கின்றது இதில் புதிய குழுவை எவ்வாறு உருவாக்குவது என இப்போது காண்போம்


படிமுறை.1. நம்முடைய திறன்பேசியில் இந்த WhatsApp பயன்பாட்டினை செயல்டச்செய்து திரையில் தோன்றிடச் செய்க
படிமுறை.2. நாம் உருவாக்கவிரும்பும் குழுக்களுக்குகான திரையின் மேலேயுள்ள தலைப்பு பட்டைதிரைக்கு செல்க
படிமுறை.3. Add participantsஎனும் தாவிப்பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல்செய்து அதற்கான திரைக்கு செல்க
படிமுறை.4. இந்த திரையில்உள்ள Invite people via link எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை.5. நம்முடைய வாட்ஸ்அப் குழுக்களில் தேவையானகுழுவை நகலெடுத்து ஒட்டிகொள்க அல்லது நேரடியாக பகிர்ந்த கொள்க அவ்வளவுதான் உடன் மற்றவர்களின் அழைப்பிற்கான இணைப்பு தயாராகிவிடும்