5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்!!

5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்!!

லக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி பஞ்சமி நாளில் திரு மகா லக்‌ஷ்மியை பூஜிக்கவும், வழிபடவும் செய்வது மிகவும் நல்லது.

ஏனெனில் இந்த நாளில் திரு லக்‌ஷ்மி குபேர பூஜை செய்வது செல்வ செழிப்பை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஒவ்வொரு வாரமும் வியாழன் கிழமை அன்று மாலை 5- இரவு 8 மணி வரை குபேர காலமாகும்.

இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபார நஷ்டம் உள்ளவர்கள் 5 வியாழன் தொடர்ந்து மாலையில் குபேர தீபம் ஏற்றி லக்‌ஷ்மி குபேர நாமம் சொல்லி வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

அதனால் லக்‌ஷ்மி பஞ்சமி நாளான நாளை மாலை 6 மணிக்கு முன்பே லக்‌ஷ்மி குபேர பூஜை செய்வது நல்லது.

குபேர பூஜை எப்படி செய்ய வேண்டும்?
முதலில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து வண்ணக் கோலமிட்ட பின் பூஜை அறையில் குபேர கோலம் போட வேண்டும்.

பின் லக்‌ஷ்மி தேவியை சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

அபிஷேகம் முடித்து விட்டு இனிப்புகளை வைத்து வணங்க வேண்டும். பூஜையின் போது திரு சூக்தம், லக்‌ஷ்மி அஷ்டகம், வேத மந்திரங்கள் ஆகியவற்றை கூறி ஜெபிக்கலாம்.

அதன் பின்னர் ஒரு தட்டில் ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

இதனால் தனம், தானியம், செல்வம், வீடு தைரியம், வீரம், அறிவு ஆகிய அனைத்தையும் பெற முடியும்.