சுவையான ஈச்சங்கொட்டை பணியாரம் செய்முறைகள்

சுவையான ஈச்சங்கொட்டை பணியாரம் செய்முறைகள்

சுவையான ஈச்சங்கொட்டை பணியாரம் செய்முறைகள் இதோ. 

தேவையான் பொருட்கள்: 

அரிசி மாவு - 1 கிலோ

தேங்காய் - ஒரு மூடி

முட்டை - 2

நெய் அல்லது டால்டா - 100 கிராம்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

 

செய்முறை:

ஈச்சங்கொட்டை பணியாரம் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். 

முதலாவதாக தேங்காயை துருவி மிக்சியில் போட்டு அரை டம்பளர் தண்ணீர் சேர்த்து அடர்த்தியான முதல் பால் எடுத்துக் கொள்ளவும். பின்னர் மீண்டும் அரை டம்பளர் தண்ணீர் சேர்த்து இரண்டாவது பால் எடுத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் முதல் பால், முட்டை, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சலித்து வைத்து, நெய்யை உருக்கி மாவில் ஊற்றவும். சூடு தணியும் வரை சிறிய கரண்டியை வைத்து மாவை நன்றாக கிளறவும். 

பின்னர் கலக்கி வைத்துள்ள தேங்காய் பாலையும், முட்டையும் மாவில் ஊற்றி நன்கு பிசையவும். பிறகு இரணடாவது பாலையும் ஊற்றி பிசையவும், தேவையெனில் தண்ணீர் கலந்து மாவு ஒட்டாதவாறு பிசையவும். 

பிசைந்து ஒரு 10 நிமிடம் ஊறவைத்து கையில் சிறிதளவு உருண்டையாக எடுத்து தட்டிக் கொள்ளவும். சிறு அச்சுகளால் தட்டிய மாவை வேண்டிய வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். 

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான ஈச்சங்கொட்டை பணியாரம் ரெடி. . இதனை தேங்காய் பாலில் ஊறவைத்தும் சுவைக்கலாம். குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக கொடுக்கலாம். விரும்பி உண்பார்கள்.