சுவையான மக்கா சோளன் குருணை பொங்கல் செய்வது எப்படி?

சுவையான மக்கா சோளன் குருணை பொங்கல் செய்வது எப்படி?

சுவையான மக்காச்சோள குருணை பொங்கல் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள் : 

பச்சரிசி குருணை - 1 கப்

பாசிப் பருப்பு - 1 கப்

காய்ந்த சோள ரவை - 1 கப்

இஞ்சி - 1 துண்டு

பச்சை மிளகாய் (நறுக்கியது) - 2

மிளகு, சீரகம் (பொடித்தது) - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தேவையான அளவு

எண்ணெய் / நெய் - 1/2

கப் உடைத்த முந்திரி - 1 கப் 

பருப்பு, அரிசி குருணை, மக்கா சோளன் ரவையை தனித் தனியாக உடைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு குக்கரில் 4-5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, சிறிது நெய், உடைத்த கலவையும் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். 

நன்றாக வெந்தபின் நெய் மற்றும் எண்ணெய் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், பெருங்காயம், உடைத்த முந்திரி, இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வடித்து வைத்துள்ள மக்கா சோளன் குருணையில் கொட்டிக் கிளறவும். வித்தியாசமான சுவையில் ஒரு புதுமையான பொங்கல் சமைத்து சாப்பிடுங்கள்.