கூகுள் ஹோம் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்

கூகுள் ஹோம் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்

கூகுள் ஹோம் ஸ்மார்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்வேறு புதிய கேஜெட்களை அறிமுகம் செய்திருக்கிறது. பிக்ஸல் மொபைல்களின் புதிய மாடல்கள், (Pixel 2, Pixel 2 XL), லேப்டாப் (PixelBook), ஹெட்செட் (Pixel Buds) என பலவற்றை அறிமுகம் செய்தது. இத்துடன் கூகுள் ஹோம் ஸ்மார்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் புதிய மாடல்களும் (Google Home Mini, Google Home Max) வந்தன.

இந்நிலையில் இன்று கூகுள் ஹோம் ப்ளூடூத் ஸ்பீக்கர் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்திருக்கிறது. கூகுள் ஹோம் மற்றும் கூகுள் ஹோம் மினி ஆகிய இரண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

கூகுள் ஹோம் ரூ.9,999 க்கும் கூகுள் ஹோம் மின் ரூ.4,499 க்கும் பிளிப்கார்ட் மூலம் இன்று விற்பனை செய்யப்படுகிறது.