வாட்ஸ் அப் பயன்பாட்டில் இந்தியர்களின் நிலை

வாட்ஸ் அப் பயன்பாட்டில் இந்தியர்களின் நிலை

ர்வதேச அளவில் நடந்த ஆய்வில், உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமானோர் வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 


இந்தியாவில் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் அப்களில், வாட்ஸ்அப் மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடமும் வா ட்ஸ்அப் என்பது நிச்சயமாக இருக்கும்.

 

வாட்ஸ்-அப் சாட்டை உளவு பார்க்கும் செயலி

 

இந்நிலையில்,காம்ஸ்கேர் என்ற நிறுவனம் வாட்ஸ்அப் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் உலகிலேயே இந்தியர்கள் தான் வாட்ஸ்அப் பயன்பாட்டை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இதில் 89 சதவீதம் பேர் மொபைல் போனிலும், 11 சதவீதம் பேர் தங்கள் கணினிகளிலும் பயன்படுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் வாட்ஸ்அப் பயன்பாட்டில் முன்னிலையில் உள்ளதாக அதில் வெளியாகி உள்ளது.