வாட்ஸ்-அப் சாட்டை உளவு பார்க்கும் செயலி

வாட்ஸ்-அப் சாட்டை உளவு பார்க்கும் செயலி

உளவு பார்க்கும் செயலி கண்டறியப்பட்டதால், அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இணையப் பயன்பாட்டில் குறுந்தகவல்களை பரிமாற்றம் செய்ய வாட்ஸ்-அப் செயலி உதவுகிறது. இதன்மூலம் செய்யப்படும் உரையாடல்கள் பாதுகாப்பாக இருக்க, பல்வேறு அ ம்சங்களை வாட்ஸ்-அப் வழங்கி வருகிறது.

இருப்பினும் ஹேக்கிங் செய்து தகவல்களை திருடுவோரின் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடிவதில்லை.

இந்நிலையில் வாட்ஸ்-அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சாட்வாட்ச் என்று அழைக்கப்படும் இந்த செயலி,

* ஒருவர் ஆன்லைனில் இருக்கும் நேரம்,

* ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டேட்டஸ் அம்சங்கள் பயன்படுத்தும் நேரம்,

* இருவர் உரையாடிக் கொள்ளும் தகவல்கள்

* நண்பர்கள், குடும்பத்தார், ஊழியர்களின் வாட்ஸ்-அப் செயல்பாடு

* லாஸ்ட் சீன் மறைத்து வைத்தாலும், எளிதில் கண்டுபிடித்து தகவல் அளிக்கும்

* அறிமுகமானவர்களின் உரையாடல் விவரங்கள், பிறருடன் ஒப்பிடும் வசதி

* வாடிக்கையாளர்கள் விரும்பும் தகவல்களை வழங்க 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

இந்த செயலி ரூ.140 கட்டணத்தில் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைத்தது. ஆனால் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது.